ஆதிசக்தி

Adhi Sakthi

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய முடியும்.

🌸 பெண்களின் பொருளாதார வளர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்தாலும் சில சமயங்களில் அவர்கள் பொருளாதார பற்றாக்குறைகளை சந்திக்கிறார்கள். இதை தவிர்ப்பதற்காக மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான பொருளாதார வருமானம் வருவதற்கு இயற்கை மூலிகைகள், மற்ற பொருட்களை உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு செய்வது ஆகும்.

🌸ஆதிசக்தி மகளிர் சுய உதவிக் குழுக்கள்

ஆதிசக்தி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை வாய்ப்பை உருவாக்குகின்றன.

இக்குழுக்களின் மூலம் பெண்கள் சிறு தொழில்கள், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டங்களில் ஈடுபட்டு, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள். பெண்கள் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற துறைகளில் பயிற்சி பெற்று தங்களின் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
இவை மூலமாக, பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைகிறார்கள்.